அமைச்சரவையில் மாற்றம் ... இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 3 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

அதன்படி 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உதயநிதி ஆகஸ்ட் 19ம் தேதிக்கு மேல் துணை முதலமைச்சர் ஆகலாம் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்த கேள்விக்கு ‘ காய்த்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை’ என முதல்வர் சூசகமாக பதில் கூறி தவிர்த்தார். இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய விரும்பியதாக தெரிகிறது. அதன்படி இன்றைய அறிவிப்பில் உதயநிதி துணை முதலமைச்சாரக்குவது, முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது ஆகியவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
