துரத்துது வழக்கு... திமுகவுக்கு தொடரும் சிக்கல்... ஜூலை 11ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

 
ஸ்டாலின்

திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்வதாகக் கூற செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா கைது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பித்தார். உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, 

செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை,  ஜூலை 11, 12ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதி கார்த்திகேயன்

நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா என்ற விஷயத்திலும், அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷா பானு கையாளவில்லை எனவும், இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி கையாண்டுள்ளதால்  இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என கூற முடியாது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

அதே போல கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது  குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன் வைக்க கூடாது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

நீதிமன்றம்

ஆனால் இதுசம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து,  வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா ? இல்லையா ? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா ? இல்லையா ? செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா ? கூடாதா ? என மூன்று முக்கிய கேள்விகளை தீர்மானித்து, விசாரணையை ஜூலை 11, 12ம் தேதிகளுக்கு தள்ளி வைத்தார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி முடிய உள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

From around the web