சதுரகிரி மலையேற்றம் தற்காலிகமாக தடை... வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், சதுரகிரி மலையேற்றத்துக்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தின் சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் இடமாகும். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களிலேயே மலையேறும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு மலையேறும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. எனினும், சமீபத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் மழையால், சதுரகிரி மலைப் பாதையில் நீரோடைகள் மற்றும் கட்டாறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை சதுரகிரி மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மழை நிலைமை சீராகிய பிறகு மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
