இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை சதுரகிரி மலையேற அனுமதி!!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

 
விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அந்த வகையில், இன்று சோமவார பிரதோஷம், ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆகஸ்ட் 28  முதல் 31  வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

சதுரகிரி


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டு பக்தர்கள் அனைவரும் காட்டுத்தீயை அணைக்கும் வரை மலையிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

அந்த வகையில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி. இரவில் மலையில் தங்க அனுமதி  கிடையாது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை. வழிகளில் தென்படும் நீரோடைகளில் குளிக்க அனுமதி கிடையாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web