அடுத்த அதிர்ச்சி.... சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் காலமானார்!! முதல்வர் ,மேயர் இரங்கல்!!

 
சரஸ்வதி


சென்னை மாநகராட்சியின் திமுக மாமன்ற உறுப்பினர் காலமானார். 59 வது வார்டின் உறுப்பினராக இருந்து வரும் சரஸ்வதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153, அதிமுக 15, காங்கிரஸ் 13, சிபிஎம், விசிக  கட்சிகளில்  தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே 3 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உயிரிழந்துள்ளனர்.

ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்
அதன்படி 122வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், 146வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மூவரும் உயிரிழந்தனர்.இந்நிலையில் மேலும் ஒரு திமுக கவுன்சிலர் உயிரிழந்து இருப்பது கட்சியினரை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்

அதில் “ 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் இறப்பு நமக்கும், கழகத்திற்கும், SM நகர் உட்பட 59-து வார்டு பகுதி மக்களுக்கும் பேரிழப்பு .அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  சென்னையில் காலியாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘‘பெருநகர சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு உறுப்பினரும், திமுக துறைமுகம் மேற்குப் பகுதி துணைச் செயலாளருமான சரஸ்வதி கருணாநிதி மறைவெய்தியது குறித்து  வருத்தமுற்றேன். சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொர்   வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி நற்பெயருடன் திகழ்ந்தார்.  அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்து விட்டோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web