சென்னை அணி முதலிடம்... அகில இந்திய கபடி போட்டிகள் நிறைவு!!

திருச்சி மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகில இந்திய அளவில் கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியை ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் ஹரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, கர்நாடகா, நாக்பூர் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இதேபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஆண், பெண் என அணிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. முதல் போட்டியை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆனால் போட்டி தொடங்கியதுமே மழை பெய்ய தொடங்கியது. இதனால் முதல் நாளில் ஆட்டம் நடைபெறவில்லை.
இறுதிப்போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு, தொடங்கி வைத்தனர் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.50 லட்சமும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும், 3வது இடம் மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிக்கு தலா ரூ.50000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன அதன்படி அகில இந்திய அளவில் சென்னை அணி போட்டியில் வென்று முதலிடத்தை பிடித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!