மிதக்குது சென்னை... நாளையும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
மிதக்கும் சென்னை

மிக்ஜாம் புயல் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களையும் புரட்டி போட்டு விட்டு கடந்து சென்றிருக்கிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் குடியிருப்பு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.4,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த ரூ.4,000 கோடியும் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதோ என கூறும் அளவுக்கு சென்னையின் அனைத்து தெருக்களிலுமே மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டிற்கு இல்லாமல் மழை நீர் நிரம்பியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி பணியில் ஈடுபட்டதை பாராட்டியே ஆக வேண்டும். 

மழை

முக்கிய சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலை போக்குவரத்து முழுவதுமாக முடங்கி போன நிலையில், புறநகர் ரயில் போக்குவரத்தும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷார்!!

தொடர்ந்து மழையினால் ஏற்பட்ட சேதங்களில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web