வெறிச்சோடியது சென்னை... திருச்சி நெடுஞ்சாலையில் விடிய விடிய வாகனங்களின் இரைச்சல்!
தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை என்று செய்தி நேற்று மாலை பரவிய நிலையில், பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட தயாரானார்கள். இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி என விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட பலரும் திட்டமிட்டிருந்த நிலையில், அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்ததாக நேற்று செய்தி பரவியது.
இதனால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினங்கள் என்று பலரும் ஊருக்குப் புறப்பட்டதால் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத நிலையில், தங்களது வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர். சென்னை நகரில் இருந்து தாம்பரம் செல்லவே நேற்று 1 மணி நேரம் வரையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில், செங்கல்பட்டு தாண்டி திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் வாகன நெரிசல். விடிய விடிய தேசிய நெடுஞ்சாலை வாகனங்களின் இரைச்சலில் தேய்ந்தது.

அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை மற்றும் நாளை அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி அரசு விடுமுறையாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 3ம் தேதி விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்ததாக செய்தி பரவியது. தற்போது இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் திடீர் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
அதனால் மக்களே.. மீண்டும் தெளிவுபடுத்திக்கோங்க. வரும் அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை கிடையாது. அதனால் நாளை மறுநாள் மீண்டும் உங்கள் பணியிடங்களுக்கு வந்துடுங்க. ஆயிரக்கணக்கானவர்கள் கிளம்பி சென்றுள்ளதால் சென்னை வெறிச்சோடி காணப்படுது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
