மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புது சென்னை... விமான சேவை துவங்கியது! இன்று 177 விமானங்கள் ரத்து!

 
விமானம் விமான நிலையம்

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டு, கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பல பகுதிகள் மிதக்க துவங்கின. கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பெரும்பாலான சாலைகளிலும்  மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதைப் போலவே ரயில் தண்டவாளங்களிலும் வெள்ளம் தேங்கியதால் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமானம் விமான நிலையம்

தற்போது புயல் சென்னையைக் கடந்த நிலையில், இன்றும் வெள்ளம் முழுவதுமாக வடியாத நிலையில், புறநகர் பகுதிகளில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மிக்ஜாக் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், மெல்ல சென்னை இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் சூழ்ந்துள்ள மழைநீர் அகற்றும் பணிகள் அசுர கதியில் நடந்து வந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு பிறகு சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது. 

airport

சென்னை விமான நிலையத்தில், விமான ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதுமாக வடிந்தது. ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 177 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web