சபரிமலை ஸ்பெஷல் ... சென்னை–கொல்லம் சிறப்பு ரயில்கள்!

 
சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே!!
 

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு, தென் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க தீர்மானித்துள்ளது. இதன் படி, சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் நோக்கி நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை இரண்டு மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் சனிக்கிழமை இரவு 7.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு எழும்பூரை அடையும்.

மேலும், சென்னை சென்ட்ரலிலிருந்து கொல்லம் நோக்கி மற்றொரு சிறப்பு ரயிலும் நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை இயக்கப்படும். இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், கொல்லத்திலிருந்து திங்கள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த இரு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களின் பயண வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16 அன்று திறக்கப்பட்டு, டிசம்பர் 27 அன்று அடைக்கப்படும் என தேவசம்போர்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!