இன்று சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தகுதிச்சுற்று தொடக்கம்!

 
டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடர், இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. இதில் மொத்தம் 16 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் நான்கு பேர் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவர். இந்தியாவிலிருந்து அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர் மற்றும் தியா ரமேஷ் ஆகியோர் தகுதிச்சுற்றில் களமிறங்கியுள்ளனர்.

அங்கிதா ரெய்னா ஜப்பானின் மெய் யமகுச்சியுடன் மோதுகிறார். ரியா பாட்டியா ஜெர்மனியின் கரோலின் வெர்னருடன் விளையாடுகிறார். வைஷ்ணவி அட்கர் ஜப்பானின் மெய் ஹொண்டமாவையும் தியா ரமேஷ் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவையும் எதிர்கொள்கிறார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பானின் நவோ ஹிபினோ, தாய்லாந்தின் தசபோர்ன் நக்லோவுடன் மோதவுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!