அத்தனையும் போச்சா கோபால்ல்ல்ல்.. 2040ல் சென்னை முழுசா மூழ்கி போயிடுமாம்: பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!

 
சென்னை

பெங்களூருவை சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) கடல் மட்டம் உயரும் அபாயம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் ஆகிய 15 நகரங்கள் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும். கடல் மட்ட உயர்வு காரணமாக 2040ஆம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 7% நீரில் மூழ்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு, மயிலாப்பூரில் உள்ள தமிழக அரசு நினைவிடம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், துறைமுகம் ஆகியவை கடல் மட்ட உயர்வு காரணமாக அதிக அபாயத்தில் உள்ளன. 2040ல் சென்னையின் 7.29% (86.6 சதுர கிமீ), 2060ல் 9.65% (114.31 சதுர கிமீ), மற்றும் 2100ல் 16.9% (207.04 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில். மேலும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை 35வது இடத்தில் உள்ளது. சென்னையின் கடல் மட்டம் 1987 முதல் 2021 வரை 6.79 மிமீ உயர்ந்துள்ளது.

மெரினா கடற்கரையில் படகு சவாரி! சுற்றுலாத்துறை அதிரடி!

சென்னை நகரின் கடல் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் 0.66 மிமீ அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் தூத்துக்குடியின் 10 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், 2100ஆம் ஆண்டுக்குள் கன்னியாகுமரியில் 74.7 செ.மீ உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்சமாக 44.4 மி.மீ கடல் மட்டம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மும்பை நகரின் கடல் மட்டம் 3.1 மிமீ அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!