செஸ் இறுதிப்போட்டி டைபிரேக்கர் சுற்று தொடக்கம்!! பிரக்ஞானந்தா சாதனை படைப்பாரா?

 
பிரக்ஞானந்தா

 உலகக் கோப்பை செஸ் போட்டிகள்  அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்று  வருகிறது. இந்த இறுதி போட்டியில்   இந்திய 'இளம் புயல்' தமிழகத்தின்  பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார். இவர் , 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனு உடன் மோதினார் 2 போட்டிகள் கொண்ட இறுதி போட்டியில்  முதலாவது சுற்றில்  35வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.   இறுதிப்போட்டியின் 2வது சுற்றும் 'டிரா' வானது. இதனால்  சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'  போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில்  ஒன்றரை மணி நேரத்தில்   30வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.  

பிரக்ஞானந்தா

அந்த சமயத்தில் இருவரிடமும் தலா 8 காய்கள் மீதமிருந்தன.   டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்ட நிலையில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் உள்ளனர்.  இந்நிலையில் டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்சலனை வீழ்த்த தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி வருகிறார். இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் மோதிய 2 போட்டிகளும் டிராவில் முடிந்ததால் டை பிரேக்கர் போடப்பட்டது. டைபிரேக்கர் சுற்று என்பது சட்டென்று யோசித்து மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டும்.

பிரக்ஞானந்தா

20 ஆண்டுகளுக்கு பிறகு  உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ளார். இதுவே நாடு முழுவதும் பெரும்  எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.   ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் விளையாட்டு நடைபெறும்.  இதில்  ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்கள் நடைபெறும். அதன்பிறகு 5 நிமிடன்க்களில் ஆட்டம்,  3 நிமிடங்களில் ஆட்டம் என முடிவு கிடைக்கும் வரை போட்டி தொடரும்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web