பாதயாத்திரை சென்ற பக்தர்கள் சாலை விபத்தில் பலி... முதல்வர் ரூ2,00,000/- நிவாரணத்தொகை அறிவிப்பு!

 
முதல்வர் ஸ்டாலின்

 தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். இவர்கள் மீது இன்று அதிகாலை  லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  அதன்படி புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துசாமி, மீனா, ராணி, லட்சுமி, மோகனாம்பாள் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாதயாத்திரை

அதன் பிறகு சங்கீதா மற்றும் கவியரசன் ஆகியோர் பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி  உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ‌.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சைக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் பக்தர்கள் இணைந்து  திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு  பாதயாத்திரையாக நடந்து சென்றனர். அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி  திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது படுபயங்கரமாக மோதியது குறிப்பிடத்தக்கது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web