திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. துணை அமைப்பு செயலாளரான தாயகம் கவியின் தாயார் ப. சவுந்தரி அம்மையார் மறைந்தார். அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட செய்தியில், “தாயகம் கவியின் தாயார் சவுந்தரி அம்மையார் மறைந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்தின் கருப்பு–சிவப்பு உணர்வுள்ள உறுதியான பெண்மணியாக விளங்கிய அவர், 97 வயதிலும் முரசொலியை தினமும் வாசித்து வந்தார் என்பது பெரும் சிறப்பு” என கூறியுள்ளார்.
அவர் மேலும், “கொள்கை உரமூட்டி வளர்த்த அன்புத் தாயை இழந்த தாயகம் கவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
