ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் !

 
ராமதாஸ்


 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைபாடு காரணமாக  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராமதாஸ் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ்

 மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு பரிசோதனை செய்து வருகிறது.  அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து, அவரது உடல்நிலைக் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?