நாளை ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்... !

 
ஸ்டாலின்

தமிழகத்திற்காக  தொழில் முதலீடுகளை  ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தார்.   ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன்  ஜனவரி 29ம் தேதி  தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக, ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள்  தமிழகம்  முதல்வர்  மு.க. ஸ்டாலினை  நேரில் சந்தித்து பேசியுள்ளார்.   ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo அவர்களும், Mr. Manuel Manjón Vilda, CEO Water Division  தமிழ்நாடு முதல்வரை  சந்தித்து பேசினார்கள்.

ஸ்டாலின்


 இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர்  மு.க.ஸ்டாலின்.  ஸ்பெயினில் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய முதல்வர்  எடிபன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளித்துள்ளது” என முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web