அதிர்ச்சி வீடியோ... தடுமாறி விழுந்த முதல்வர்!!

 
நிதீஷ்குமார்

நேற்று செப்டம்பர் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்படடது. அந்த வகையில் பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில்  நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அவருடன்  அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பாட்னா பல்கலைகழக துணைவேந்தர் கிரிஷ் குமார் சவுத்ரி உட்பட பல அரசியல் தலைவர்களும்  நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 முதல்வர்  நிதிஷ்குமார், முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நிதிஷ் குமாரும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் இணைந்து கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைப்பதற்காக எழுந்து  சென்றனர்.அப்போது திடீரென நிதிஷ் குமார், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

நிதீஷ்குமார்

உடனடியாக சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் நிதிஷ்குமாரை கை கொடுத்து தூக்கிவிட்டனர். இதில் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஒரு சில நொடிகளிலேயே  அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். பாதுகாவலர்களை நோக்கி புன்னகைத்து விட்டு உடனடியாக   கல்வெட்டை திறந்து வைக்க சென்றார். இந்நிகழ்வில்   நிதிஷ்குமார் திடீரென தடுமாறி விழுவது போல் சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web