முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டி... தூத்துக்குடி அணி முதலிடம்; ரூ.13½ லட்சம் பரிசு!

 
முதலமைச்சர் கோப்பை

கோவில்பட்டியில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி  போட்டியில் இறுதி ஆட்டத்தில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தி, தூத்துக்குடி அணி முதலிடம் பிடித்தது. இந்த அணிக்கு ரூ.13½ லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையான முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்று மாலையில் இறுதி லீக் ஆட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட அணியும், செங்கல்பட்டு மாவட்ட அணியும் மோதின. இதில் தூத்துக்குடிஅணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

முன்னதாக ஆட்டத்தில் சென்னை அணியும், கோவை மாவட்ட அணியும் மோதின. இதில் சென்னை அணி 12-2 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆக்கி கழக பொதுச்செயலாளர் செந்தில்ராஜா, கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாச்சலம், வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதல் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூ.13½ லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 9 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பையும், 3-வது இடம் பிடித்த செங்கல்பட்டு அணிக்கு ரூ.4½ லட்சம் பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், அர்ஜூனா விருது பெற்ற ஆக்கி வீரர் முகமது ரியாஸ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கா. கருணாநிதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை மண்டல மேலாளர் ராஜா, மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, கோவில்பட்டி அரசு சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன், கே. ஆர். கல்லூரி முதல்வர் மதிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?