தீபாவளி கொண்டாடாதீங்க... தவெக தொண்டர்களுக்கு தலைமை வேண்டுகோள்!
கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டர்கள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூர துயர சம்பவத்தில் உயிரிழ்ந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியின் சார்பில் தொண்டர்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என இந்த அறிவிப்பை என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
