தேர்தல் பிரச்சாரம்.. குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

 
 தேர்தல் பிரச்சாரம்

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do not use children in poll campaigning: EC to political parties - The  Economic Times

சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தேர்தல் பணியின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்துவதை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு செல்வது, வாகனங்களில் குழந்தைகளை ஏற்றி செல்வது, பேரணிகள் போன்ற எந்த வகையிலும் குழந்தைகளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒரு அரசியல் தலைவரின் அருகில் ஒரு குழந்தை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது விதிகளை மீறுவதாக கருதப்படாது என்று தொடர்புடைய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

Election Commission says don't use children for Lok Sabha Election campaign  to political parties - India Today

தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் அரசியல் கட்சிகளின் முக்கியப் பங்கு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தி வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் அம்சங்களை நிலைநிறுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web