ரூ.12 கோடி மதிப்பிலான சீனப்பட்டாசுகள், பொம்மைகள் பறிமுதல்... தூத்துக்குடி துறைமுகத்தில் பரபரப்பு!

 
சீனப் பட்டாசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீனாவில் தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பட்டாசுகள் கடத்தப் படுகிறதா என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் நிங்பே துறைமுகத்தில் இருந்து வந்த சரக்கு கப்பலில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்காக வந்ததாக கூறப்பட்ட இரண்டு கன்டெய்னர்கள் ஆவணங்களில் *என்ஜினீயரிங் உபகரணங்கள்* மற்றும் *சிறிய டிராலிகள்* என குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும், ஆவணங்களில் முரண்பாடு இருப்பதால் அதிகாரிகள் அவற்றை சந்தேகத்தின் பேரில் திறந்து சோதனை செய்தனர்.

கப்பல் துறைமுகம் ஆஷிஷ் கச்சோலியா

அப்போது, சிலிக்கான் சீலென்ட்கன், ஒட்டும் பசை போன்ற பொருட்களின் பின்னால் மறைத்து வைக்கப்பட்ட 8,400 அட்டைப்பெட்டிகளில் சீன பட்டாசுகள் மற்றும் சீன பொம்மைகள் கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ₹12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சதிக்கு தொடர்புடையவர்களாக தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன் உள்ளிட்டவர்கள், மும்பையை சேர்ந்த விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய நால்வரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கப்பல் நிவாரண பொருட்கள் இலங்கை

தீபாவளிக்கான சந்தையை இலக்கு வைத்து, எஞ்சினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணங்கள் தயாரித்து இந்த பெரிய அளவிலான சீனப்பட்டாசுகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற கடத்தல்களை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?