அரசு பேருந்தில் டிஜிட்டல் பெயர் பலகையில் சீன மொழி... பெரும் பரபரப்பு!

 
சீனமொழி
 


 
அரசு பேருந்துகளில் இப்போது அனைத்து பஸ்களிலும் நவீனமயமான டிஜிட்டல் பெயர் பலகைகள் நிறுவப்பட்டு, பயணிகள் எளிதில் செல்ல வேண்டிய இடத்தையும் வழித்தடத்தையும் இரவிலும் தெளிவாக காண முடிகிறது. இந்த பலகைகள் பஸின் முன், பின் பகுதிகளில் ஒளிரும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி செல்லும் டவுன் பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென தமிழ் பெயருக்கு பதிலாக சீன மொழியில் ஊர் பெயர் தெரிவிக்கபட்டது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

சமூக வலைதளங்களில் இதை கொண்டு “திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பஸ்” என்று கலாய்த்துப் பதிவுகள் வலம் வந்தன. இதன் விளைவாக அந்த வீடியோ விரைவில் வைரலாகி பரபரப்பை உருவாக்கியது.

போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்யும்போது, இது டிஜிட்டல் பலகையின் எலக்ட்ரிக்கல் சர்கியூட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட தவறு என தெரிய வந்தது. சம்பவம் பின்னர் உடனடியாக சரிசெய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களிலும் இருக்கும் டிஜிட்டல் பெயர் பலகைகள் ஆய்வு செய்யப்பட்டு, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?