தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை... நடிகர் ஜீவாவுக்கு ஷொட்டு கொடுத்த சின்மயி!
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட மீ டூ இயக்கத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் மீண்டும் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுதது வருகிறது. பல நடிகைகளும் தாங்களும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டதாக தற்போது பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்தித்துதான் வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சில பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தாலும் அவை அப்படியே சில நாட்களில், வாரங்களில் நீர்த்து விடுகின்றன.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சினிமாவில் அதிகம்தான் என்பதை மறுக்க முடியாது. கலர்புல்லான வாழ்ககையை பரிசளிக்கும் திரைத்துறை நிறைய அவலங்களையும் பெண்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், இந்த விஷயத்தில் கேரள நடிகைகள் உட்பட பலரும் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு இந்த விஷயத்தில் ஏராளமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2019ல் இதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த காரணத்தினால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பல்வேறு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அந்த வகையில், அடக்கி வைத்த தங்களது பிரச்சினைகள் குறித்து பலரும் தற்போது வாய்திறந்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் எப்படி செயல்பட்டோம் என நடிகைகள் ராதிகா, குஷ்பூ உட்பட பலரும் பேசி வருகின்றனர். இதனை தொடர்ந்து பல நடிகர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் நடிகர் ஜீவாவிடம் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் தமிழில் இத்தகைய பாதிப்புகள் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து அறிவு இருக்கா எனக் கேட்டதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் நடிகர் ஜீவாவின் இந்த பதிலுக்கு பாடகி சின்மயி கோபத்துடன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். தமிழில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என எப்படி கூறுகிறார்கள் இந்த விவகாரம் தனக்கு புரியவே இல்லை என சின்மயி தன்னுடைய பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!