செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு, பூஜை, பலன்கள்!

 
துன்பங்களைத் துரத்தி அடிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு !
 

செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி!! இதை செய்ய மறக்காதீங்க!!

 By Kabilan P Apr 16, 2022, 09:09 IST 

துன்பங்களைத் துரத்தி அடிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு !

இன்றைய தினத்தை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. நாள், நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பார்கள். சகல செல்வங்களையும் அள்ளி தரும் சித்ரா பெளர்ணமி விழாவான இன்றைய தினம், நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் காரியங்களை முயற்சித்து பாருங்கள். உறவினர்களிடையே இருக்கும் மன கசப்புகளை இன்றைய தினம் போக்குவதற்கு முயன்று பாருங்கள். தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை. இந்த மாதத்தில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மானிடராக பிறப்பெடுத்த அனைவரின் பாவ, புண்ணிய கணக்குகளை சித்ரகுப்தன் தான் கணக்கு எழுதி வைத்துக் கொள்வார். சித்ரா பௌர்ணமியில் சித்ரகுப்தனை வணங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். 

சித்ரா பௌர்ணமி
சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி  தினத்தில் சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடலாம். அத்துடன் அம்பிகை வழிபாடும் வாழ்வின் மிக உன்னதமான பலன்களை தரும். சித்ரா பெளர்ணமி தினத்தில் அனைத்து சிவ மற்றும் வைணவ ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போல் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் மிக மிக சிறப்பு வாய்ந்தது இந்த சித்ரா பௌர்ணமி.

சித்ரா பௌர்ணமி

இந்த தினத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு  தான, தர்மங்கள் செய்வதால் அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் கிட்டும். மேலும் சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்வும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர், பானகம் இவைகளை நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். சித்ரா பௌர்ணமியில் அம்பிகையை வழிபாடுவோம்.நீடித்த வளமான வாழ்வு பெறுவோம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

செயற்கை காலுடன் நடக்கும் யானை!! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!