40 கிலோ எடையில் முந்திரி, திராட்சை , பாதாம், உலர்பழங்களை மதுவில் ஊறவைத்து கிறிஸ்துமஸ் கேக்...!!

 
40 கிலோ கேக்

 கிறிஸ்துமஸ் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. பொதுவாக ஒரு மாதம் முன்பிருந்தே கிறிஸ்துமஸ் புத்தாண்டுக்கான முன்னேற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிடும்.  அந்த வகையில் புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட்  உணவகத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  கேக் செய்யும் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது.  

கேக்

40 கிலோ  முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தை  சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். கேக் தயாரிக்க ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

கிறிஸ்துமஸ் சில சுவாரசிய தகவல்கள்!

மதுவில் நன்றாக ஊறி கேக் அட்டகாசமாக கிறிஸ்துமசுக்கு தயாராகி விடும்.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  
 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web