‘சங்கி’ கெட்ட வார்த்தை கிடையாது... விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

 
ரஜினி

இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் ரஜினிகாந்த், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என்றும், அப்படி தனது மகள் ஐஸ்வர்யா எங்கேயுமே பேசவில்லை எனவும், தனது மகள் சரியாகவே பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 26-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் ஐஸ்வர்யா பேசும்போது, " என் அப்பாவை சங்கி என்று யாராவது சொன்னால் எனக்கு கோபம் வரும். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல, மனிதநேயவாதி. ஒரு சங்கியால் ‘லால்சலாம்’ போன்ற படங்களில் நடிக்க முடியாது" எனக் கூறினார். இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது, கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்கு ’வேட்டையன்’ படப்பிடிப்பிற்குச் செல்வதாக தெரிவித்தார். மேலும், ’லால்சலாம்’ படம் குறித்தும், ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்தும் அவரிடம் கேட்டதற்கு, “ ’லால்சலாம்' படம் நன்றாக வந்திருக்கிறது. அப்படம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

ரஜினி விமான நிலையம்

சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று யாரும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள் என்றுதான் என் மகள் ஐஸ்வர்யா வேதனைப்பட்டார். அவர் சரியாகவே பேசியுள்ளார்” என்றார் ரஜினிகாந்த்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web