சினிமா வாய்ப்பு.. ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை சீரழித்த உதவி இயக்குனர்!
நாளுக்கு நாள் சினிமா வாய்ப்புகளை தேடி இளம் பெண்கள் திரை உலகில் படையெடுத்து வருவது இன்றும் நேற்றும் கதையாக தொடர்கிறது. அந்த வகையில், தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற இளம்பெண்ணை சீர்ழித்த உதவி இயக்குனர் கைது செய்யப்பட்ட விவகாரம் திரையுலகம் எங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான திரைப்பட உதவி இயக்குநரான சித்தார்த்த வர்மா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோண்டாபூர் ராகவேந்திரா காலனியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த உதவி இயக்குனர், அந்த பெண்ணின் அழகை அதிகம் பாராட்டியது மட்டுமின்றி, சினிமாவுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்ப வைத்துள்ளார். அந்த இளம்பெண், இயக்குனரின் வார்த்தைகளை நம்பி தனது செல்போன் எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு அடிக்கடி போனில் அழைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு முறை சித்தார்த் வர்மா அந்த இளம்பெண்ணிடம் உடனே தன் வீட்டிற்கு வந்தால் செலக்ட் செய்து போட்டோக்களை எடுத்து காட்டி தனக்கு பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உதவி இயக்குனர், குடித்துவிட்டு புகைப்படம் எடுப்பதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரிடம் அட்ஜஸ்ட் செய்தால் உடனே பட வாய்ப்புகள் வரும் என உறுதியளித்துள்ளார். ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த இளம்பெண்ணுடன் சித்தார்த் வர்மா அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும், பின்னர் அவரது விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு, தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தராமல் தொடர்ந்து ஏமாற்றியதால், அந்த இளம்பெண் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உதவி இயக்குனர் சித்தார்த் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், போலீஸ் விசாரணையில், பல பெண்களை இப்படி ஏமாற்றியது தெரிய வந்துள்ளதால், அவரது செல்போனில் உள்ள எண்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் திரை உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
