ஒரே படத்துல ‘பருத்தி வீரன்’ நிலைமை இப்படியாயிடுச்சே... நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சின்னத்திரை நடிகை...

 
கார்த்தி சுவாதி

‘ஜப்பான்’ ஓவர் பில்டப் கொடுத்து ரிலீஸான நிலையில், ஒரே படத்தில் நடிகர் கார்த்தியின் திரையுலக மார்க்கெட் சரிந்துள்ளதாக ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். வியாபார விஷயங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கே வெளிச்சம் என்றாலும், லாபமா, நஷ்டமா என்கிற கணக்கிற்குள் செல்லாமல், தங்கள் தலைவரின் படம் ஹிட்டா, ப்ளாப்பா என்கிற வருத்தத்தில் ரசிகர்கள் அப்செட் தானாம்.

’ஜப்பான்’ திரைப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல்

இந்நிலையில், சொல்லி வைத்தாற்போன்று நடிகர் கார்த்தியின் அடுத்தப் படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது சின்னத்திரை நடிகைகளை தரக்குறைவாக எடைப்போடுவதில்லை என்றாலும், ஒவ்வொரு படத்திற்கும் மும்பை, கேரளா என ஹீரோயின்களை இறக்குமதி செய்து வரும் தமிழ் சினிமாவில், ஹிட்டடித்த மும்பை ஹீரோயின்களுடன் நடித்து வந்த நடிகர் கார்த்தி, தற்போது சின்னத்திரை நடிகையுடன் ஜோடியாக நடிக்க இருப்பது, கார்த்தியின் படங்களின் பட்ஜெட், வியாபாரம் சரிந்துள்ளதால் தான் என்று கோலிவுட்டில் கொளுத்திப் போடுகிறார்கள். ‘ஜப்பான்’ மூலமாக அதள பாதாளத்திற்கு சரிந்துள்ள தன்னுடைய மார்க்கெட்டை, மீண்டும் தன்னுடைய உறுதியான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் கார்த்தி தெளிவாக உள்ளார்.

’ஈரமான ரோஜாவே 2’ சீரியல் சுவாதி

‘96’ படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் சின்னத்திரை நடிகை சுவாதி, கார்த்தியுடன் ஜோடி சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஈரமான ரோஜாவே 2’ நடித்து வருகிறார் சுவாதி. இனிமேலாவது பில்டப்புகளை நம்பாமல் கதையை நம்பி கார்த்தி நடித்து வந்தால், மீண்டும் ஹிட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் கோலிவுட் திரையுலக ஜாம்பவான்கள். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

 

From around the web