பள்ளத்தில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி... பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக ஆட்டைய போட்ட குடிமகன்கள்...!!

 
பீர்பாட்டில்


செங்கல்பட்டு மாவட்டம், வையாயூரில் தனியார் பீர் உற்பத்தி ஆலை   செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  கடலூர்  அரசு மதுபான சேமிப்பு கிடங்கிற்கு 1500 பெட்டிகளில் 18,000 பீர் பாட்டில்கள் கனரக லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த கனரக லாரி   சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பேருந்து ஒன்று லாரியை முந்தி செல்ல முயற்சித்தது.   பேருந்து மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் இடதுப் பக்கம் வாகனத்தை திருப்பினார்.  

குடிமகன்கள்

திடீரென  கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தால்  கண்டெய்னரில் இருந்த பீர் பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்து விழுந்தன.   தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுபானப் பிரியர்கள் சாலையில் சிதறி கிடந்த பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக  அள்ளிச் சென்றனர். அதே நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்த  காவல்துறையினர் பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றவர்களிடமிருந்து அதனை கைப்பற்றினர். மேலும் பீர் பாட்டில்களை யாரும் எடுக்காதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   மதுபான ஆலையிலிருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு அதில் இந்த மதுபான பாட்டில்களை ஏற்றினர்.  

குடிமகன்கள்

பெட்டிகள் சேதம் அடைந்து தண்ணீரில் மூழ்கிய பீர் பாடல்களை ஊழியர்கள் எடுக்கவில்லை. அப்படியே விட்டுச்சென்றனர். இதற்காகவே காத்திருந்த மதுபானப்பிரியர்கள்  தாங்கள் அணிந்திருந்த சட்டை மற்றும் லுங்கிகளில் பீர் பாட்டில்களை மறைத்து  எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web