காங்கோவில் வெடித்த உள்நாட்டு கலவரம்.. ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் பலி!

காங்கோ தலைநகர் மின்ஷாசாவில் உள்ள கின்சல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. காங்கோ ஆற்றங்கரையில் குடியேறிய யக்கா உட்பட பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த இப்பகுதியின் வரலாற்று மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நில உரிமைகள் போன்ற பிரச்சனை ஏற்பட்ட நிலையில், போராட்டம் வெடித்தது.
காங்கோ அதிபர் பெலிக்ஸ் சிசெகெடி முன்னிலையில் கடந்த ஏப்ரலில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வன்முறையை அடக்க காங்கோ ராணுவம் தவறிவிட்டது. அதையடுத்து, காங்கோவின் கிழக்குப் பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சண்டையிட்டு வரும் நிலையில், அந்நாட்டின் மேற்குப் பகுதியிலும் வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் போராடி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா