லடாக்கில் பொதுமக்கள் கொந்தளிப்பு ... ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டம் நடந்த லே நகரில் வன்முறை வெடித்ததால் காவல் படைகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மோதல்களில் சுமார் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறைக்கு, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக்கின் தூண்டுதல்தான் காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டிய மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று செப்டம்பர் 2ம் தேதி 'லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)' என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே, லே வன்முறைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாக சோனம் வாங்சுக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
