கல்லூரி மாணவர்களிடையே மோதல்... பெரும் பரபரப்பு!

 
நெல்லை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இருவருக்கு இடையில் பகுதி நேர வேலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் இரு குழுக்களாக மாறி கல்லூரி வளாகத்திலேயே தகராறாக அமைந்தது. இதில், பல மாணவர்கள் ஒருவருக்கொருவர்  மோதிக் கொண்டனர்.

வாக்குவாதத்தின் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் நண்பர்களும் சேர்ந்து தங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, மோதலை மேலும் தூண்டியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் மோதிய காட்சிகள் அப்பகுதியில் உள்ள சில பொதுமக்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

உத்தரபிரதேச போலீஸ்

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மோதலுக்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளதா என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவ்வாறான மோதல்கள் அதிகரித்து வருவது கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடு மற்றும் மாணவர் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?