வடகலை தென்கலை பிரிவினரிடையே மோதல்... மீண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் பரபரப்பு!

 
காஞ்சிபுரம்

  
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றதும் பழமையானதுமான ஸ்தலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் . இந்த கோவிலில் தூப்புல் வேதாந்த தேசிகர் மங்களாசாசன உற்சவம் நேற்று நடைபெற்றது.இதற்காக  கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவது மரபு.

இந்நிலையில் நேற்று மாலை வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடிய நிலையில், மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராக கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திர பாடல் பாட முன்வந்தனர்.
இதனையடுத்து  வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை ஸ்தோத்திர பாடலைப் பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாகத்திடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.  

கோவில் நிர்வாகம் கடந்த ஆண்டும்  தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு எப்படி பாடலாம் என வடகலை பிரிவு ஐயங்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு போட்ட தடை உத்தரவை உதவி ஆணையர் ரத்து செய்துவிட்டதாக விளக்கம் அளித்தார். அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனக் கேட்டு வடகலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?