10ம் வகுப்பு மாணவன் தற்கொலை... ஒரே பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலையால் பரபரப்பு!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் விலயனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்குமார் மகன் வைபவ் (16), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததும், பெற்றோர் கேட்ட போது தெளிவான பதில் கூறாமலும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த வைபவ், தற்கொலைக்காக தூக்கில் தொங்கிய நிலையில் தாயார் வீடு திரும்பியபோது கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அதே பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு 9ம் வகுப்பு மாணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மாணவர்களுக்கு மனரீதியான அழுத்தம் கொடுத்ததாக தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதால், இந்த பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களைக் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
