சென்னை நிவாரண முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... மக்களுக்கு உணவு வழங்கினார்!

 
ஸ்டாலின்

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டு விட்டு கடந்துள்ள நிலையில், சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்

நேற்றைய தினம் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. முக்கிய சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையை அடுத்துள்ள புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன.

வெள்ளம்

பேருந்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்றதை தொடர்ந்து மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. 

வெள்ளம்

இந்நிலையில், சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்ட காலை உணவுகளை அங்குள்ள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web