CM சார் என் மீது கை வையுங்க.. என் தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க... விஜய் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

 
விஜய்

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியலிலும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மாற்றி மற்றொருவர் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது சர்ச்சையாகி உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் மெளனம் கலைத்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். தவெக கட்சியின் எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், “5 மாவட்டங்களில் பிரச்சாரம் நடந்த போது நடக்காத ஒரு சம்பவம் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி இருக்கிறது. ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?