எக்ஸ்பிரஸ் ரயிலில் கழன்று ஓடிய பெட்டிகள்... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!

 
ரயில்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயில்   நேற்று காலை 11.30 மணிக்கு  புறப்பட்டது. அந்த ரயில் போரிவிலியை கடந்து பிற்பகல்  1.19 மணிக்கு  வான்காவ்–தகானு ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, திடீரென ரயிலின் கடைசி 2 பெட்டிகளின் இணைப்பு உடைந்தது. இதனால் 2 பெட்டிகள் தனியாக கழன்று சென்றன. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.

இது குறித்து அறிந்த எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ரயிலில் இருந்து பிரிந்த பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு  சுமார் அரை மணி நேரம் கழித்து எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.  

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.10 மணிக்கு ரயில் வாபி அருகே சஞ்சன் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அந்த 2 பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டது.ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு பணிகள் முடிந்தன. 
இதையடுத்து, அந்த ரயில் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. 2 முறை ரயில் பெட்டிகள் பிரிந்ததால் சுமார் 3 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.இந்தச் சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை  ரயில் பெட்டிகள் 2 முறை கழன்றதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?