தமிழகத்தில் மலரப்போவது கூட்டணி ஆட்சியா? ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கத்தால் பரபரப்பு!

 
rameshwaram rameshwaram

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் வாசிக்கப்படும் பாரம்பரியப் பஞ்சாங்கம் இந்த ஆண்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் குருக்கள் உதயகுமார் வாசித்த இந்தப் பஞ்சாங்கத்தில் வரும் ஓராண்டில் தமிழகத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாகத் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற தகவல் தற்போதைய அரசியல் சூழலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமாவாசை ராமேஸ்வரம்

இந்த ஆண்டு எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் அமையும் என்றும் ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி கட்சிக்குச் சரிவை ஏற்படுத்தும் என்றும் பஞ்சாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மிக முக்கியப் பதவியை வகிக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 ராமேஸ்வரம்

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையில்லாமல் இருக்கும் என்றும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும் என்பதால் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பாரம்பரியமாக வாசிக்கப்படும் இந்தப் பஞ்சாங்கத் தகவல்கள் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை