சரிந்து விழுந்த விளம்பரப் பலகை... அதிர்ச்சி வீடியோ!

 
விளம்பரப்பலகை

 
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும்  கனமழை பெய்து வருவதால்  வானிலை ஆய்வு மையம் அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் தானே மாவட்டத்தில் நேற்று  அதிகாலையில் இருந்து கனமழையுடன்  அங்கு பலத்த சூறைக்காற்று வீசி வந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக  பாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடையின் மேல் பொருத்தப்பட்டு இருந்த விளம்பரப் பலகை ஒன்று பலத்த காற்றால் கீழே  விழுந்தது. அந்த விளம்பரப் பலகை சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மேல் விழுந்து கோரவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு  மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து  வீடியோவும் சமூக வலைதளங்களில்  வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!