பகீர் சிசிடிவி காட்சிகள்... இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறையின் சுவர்…. அலறியடித்து ஓடும் மாணவர்கள்!

குஜராத் மாநிலம் வதோதராவில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ நாராயணன் குருகுல் பள்ளி. இந்த பள்ளியில் வழக்கம் போல் 7ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர். திடீரென வகுப்பறையின் பக்கவாட்டு சுவர் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு உணவு இடைவேளையில் திடீரென இடிந்து விழுந்தது. வகுப்பறையில் இருந்து மாணவர்களின் அலறல் சட்டம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டுள்ளனர்.
After bridge collapse now even schools are not safe in Gujarat pic.twitter.com/gbcMRaD2Yh
— Divyanshu Choudhary (@divyanshu527) July 20, 2024
இந்த விபத்தில் மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்திலிருந்து மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மீது விழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் வகுப்பில் சுவர் இடிந்த பொழுது சுவரின் அருகில் இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா