கல்லூரி பேருந்து தனியார் பேருந்துடன் மோதல்... 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்...!!

 
பேருந்து விபத்து

ஈரோட்டில் செயல்பட்டு வரும்   தனியார் மகளிர் கல்லூரியில் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்தும் மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரி பேருந்தின் மூலம் கல்லூரிக்கு வருவதுண்டு. அந்த வகையில் வழக்கம் போல் இன்று  காலை திருப்பூரில் இருந்து கல்லூரி பேருந்து ஒன்று மாணவிகளை ஏற்றுக் கொண்டு புறப்படத் தயாரானது.  இந்த கல்லூரி பேருந்து, ஊத்துக்குளி ரோடு பெரியபாளையம் வழியாக சென்று கொண்டிருந்தது.  

விபத்து

அப்போது  திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் கல்லூரி பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் சில மாணவிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு ஓடோடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் காவல்துறை ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம்  மாணவிகள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. புத்துணர்ச்சியுடன் காலை  கல்லூரிக்கு கிளம்பிய மாணவிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web