கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை... பெரும் பரபரப்பு!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருபவர் குருசாமி. இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரியும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் அர்ச்சனா. இவர் வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலையும் வழக்கம் போல கல்லூரிக்கு வந்திருந்த அர்ச்சனா, பிற்பகல் 12 மணிக்கு கல்லூரியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவி, உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “பேராசிரியர்கள் மாணவியை தவறாக திட்டியதாலே மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து புகாரில் குறிப்பிடப்பட்டதுதான் காரணமா அல்லது தற்கொலை செய்துக் கொண்டதற்கு வேறேதும் காரணங்கள் உள்ளதா என பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!