காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை... விமான நிலையம் அருகே பயங்கரம்!
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மீது மூவர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவரம் தெரிவதாவது, மாணவியுடன் இருந்த நண்பர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த இளைஞரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை அடையாளம் காண தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கோவை காவல் துறை மேற்பார்வையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
