கல்லூரி மாணவர் ஏரியில் குதித்து தற்கொலை... தந்தை கண்டித்ததால் விபரீதம்... !

 
சேத்தன்

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சாதனகெரே படாவனேயில் வசித்து வருபவர்  சரணப்பா கொட்டிஹாலா. இவரது மகன் 23 வயது சேத்தன்  தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சேத்தனுக்கு தொடக்கம் முதலே படிப்பில் ஆர்வம் இல்லை. விளையாட்டில் தான் அதீத ஆர்வம். இதனால் தினமும் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து   கால்பந்து விளையாடுவதற்காக சென்றுவிடுவார். தினசரி சொல்லி பார்த்தும் சேத்தன் கேட்கவில்லை. இதனையடுத்து  தந்தை சரணப்பா கொட்டிஹாலா, சேத்தனை கண்டித்துள்ளார். கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாட போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏரி

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான சேத்தன்   கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை.  அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேத்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர்.  நண்பர்களிடம் விசாரித்தும்  எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை   போலீசில்  புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் சேத்தனை தேடி வந்தனர். 

ஆம்புலன்ஸ்


இந்நிலையில் நேற்று காலை கெலகெரே ஏரியில்  ஒரு இளைஞரின் உடல்   மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற   போலீசார் இளைஞரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதே நேரத்தில் அதுவரை   மாயமாகி இருந்த  கால்பந்து வீரர் சேத்தனின்  உடல் என  தெரியவந்தது. மே தந்தை திட்டியதால் சேத்தன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web