கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை... உருக்கமான கடிதம் சிக்கியது!

 
சரோஜ்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன் டேவிட். இவரது மகள் சரோஜ் பெனிட்டா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், பல்கலைக்கழக விடுதி அறையில், மாணவி சரோஜ்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன் தினம் வகுப்பறைக்குச் செல்லாமல், விடுதி அறையிலேயே இருந்துள்ளார் மாணவி சரோஜ். வகுப்புகள் முடிவுற்று, பிற்பகலில் சக மாணவர்கள் அறைக்கு திரும்பி வந்து பார்த்தனர் சரோஜின் அறையில் பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் விருப்பம் இல்லாத படிப்பில் சேர்த்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. 

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

 அப்போது சரோஜ் பெனிட்டா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.‌ பின்னர் கல்லூரி ஊழியர்கள் மாணவி சரோஜை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

பின்னர் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாணவி சரோஜ் பெனிட்டா உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   
முதற்கட்ட விசாரணையில் சரோஜ் பெனிட்டாவிற்கு அதிக அரியர்கள் இருந்ததும், அவருடன் படித்த சக மாணவர்கள் 5ம் ஆண்டு  படித்து வருவதால் இவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்