உஷார்.... டெங்குவால் கல்லூரி மாணவி பலி!! கதறித்துடித்த பெற்றோர்!!

 
காயத்ரி

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக   மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனையடுத்து மழைக்கால நோய்களான சளி , இருமல், காய்ச்சல் ஆகியவை வரத்தொடங்கியுள்ளன. இந்த மழையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பலர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

டெங்கு


 புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்   காயத்ரி.   இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர்  உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு அறிகுறி இருந்ததனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உஷார்!கொரோனாவை அடுத்து வரும் டெங்கு, ஜிகா வைரஸ்கள்! இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரம் !!

இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு நோயால்   உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியினரின் 4 வயது மகன் ரக்‌ஷன் டெங்குவால் செப்டம்பர் 10-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web