ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் பலி!
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடலில் நீந்தச் சென்ற மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், கேரளா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் நேற்று காலை கடற்கரைக்கு வந்தனர். இதில் கவின் பிரகாஷ், முகமது ஆதில் மற்றும் ரோகித் சந்திரா ஆகிய மூவர் கடலில் இறங்கியபோது, திடீரென எழுந்த அலையில் சிக்கினர்.

இதில் பிரகாஷ் உயிரிழந்தார்; முகமது ஆதில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாயமான ரோகித்தை தேடும் பணி நேற்று முழுவதும் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கியிருந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
