மண் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லூரி மாணவி பலி!

 
மாணவி
 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூய்மைப் பணிகள் நடக்கும் போது, கனமழையால் வீட்டின் பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

ஆம்புலன்ஸ்

இந்த இடிபாட்டில் பவானி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  பவானி உயிரிழந்தார். திருத்தங்கல் காவல்துறை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் மாணவியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!