கல்லூரி மாணவன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலி!! கதறித் துடித்த நண்பர்கள்!!

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவரது மகன் ஆல்வின் ஜான்சன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர்கள் 3பேர். திருப்புகழ் , பூபால் , அஸ்வின் . ஆல்வின் ஜான்சன் தனது நண்பர்கள் 3 பேருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.நீர்வீழ்ச்சியை பார்த்ததும் குளிக்கும் ஆர்வம் ஏற்பட்டு அனைவரும் குளிக்க சென்றனர்.
அப்போது ஆல்வின் ஜான்சன் நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தார். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்களுக்கும் நீச்சல் தெரியாதது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ச மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி இறந்த ஆல்வின் ஜான்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்லது. இந்த நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தததால் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு செல்லவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். நீர்வீழ்ச்சியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!